திமுக, தவெக ஒரே அணியில் இணைய வேண்டும் - திருமாவளவன் சொல்லும் காரணம்
திமுக, தவெக ஒரே அணியில் இருக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக, தவெக ஒரே அணியில்...
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது.

கட்சியின் முதல் மாநாட்டிலே திமுகவை அரசியல் எதிரியாகவும், பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மற்றும் தவெகவிற்கு மட்டுமே போட்டி என திமுகவை மட்டுமே விஜய் விமர்சித்து வந்தார்.
தற்போது ஆட்சியமைத்த பின்னரும் திமுக மற்றும் தவெக அரசியல் தளத்தில் கடுமையாக மோதி வருகிறது.
இந்நிலையில், திமுகவும், தவெகவும் ஒரே அணியில் இருக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவன் அழைப்பு
செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசிய அவர், "நான் தமிழ்நாட்டையோ, விடுதலை சிறுத்தைகளையோ மனதில் வைத்து பேசவில்லை. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒரு அணியை கட்ட வேண்டும்.

அந்த அணியில் திமுகவும் இருக்க வேண்டும், தவெகவும் இருக்க வேண்டும். இது தான் என்னுடைய பார்வை. இதனை தமிழ்நாடு அரசியல்வாதிகளாலும் புரிந்து கொள்ள முடியாது. ஊடகவியலாளர்களாலும் புரிந்து கொள்ள முடியாது. இவர் என்ன குழப்புகிறார் என கேட்பாங்க.
திமுகவிற்கும், தவெகவிற்கும் எதிரும் புதிருமான நிலை இருந்தால் கூட தேசிய அளவில் பாஜகவை எதிர்ப்பதற்கு, மதவாதத்தை எதிர்ப்பதற்கு, அவர்களின் சாதி அரசியலை முறியடிப்பதற்கு உள்ளபடியே பாஜகவை கொள்கை எதிரி என சொல்லக்கூடிய தவெகவும் அதில் இருக்க வேண்டும். பாஜகவை தொடர்ந்து எதிர்க்கிறோம் என சொல்லும் திமுகவும் அதில் இருக்க வேண்டும்.
இது என்னுடைய கருத்து. இதை நான் சொன்னால் திருமாவளவனுக்கு என்ன ஆச்சு என கேட்பாங்க. அது அவங்க புரிதலில் உள்ள சிக்கலே தவிர என்னுடையபார்வையில் உள்ள சிக்கல் இல்லை" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |