தான் பிறந்த அரசு மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு
முதல்வர் விஜய் தான் பிறந்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஆய்வு செய்துள்ளார்.
எழும்பூர் மருத்துவமனையில் முதல்வர் விஜய் ஆய்வு
சென்னை எழும்பூரில் தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று எந்த முன்னறிவிப்புமின்றி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று ஆய்வில் ஈடுபட்டார்.
மருத்துவமனையில் இருந்த மகப்பேறு மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய விஜய், மருத்துவமனையில் வழங்கப்படும் தாய், சேய் நல சேவைகள், மகப்பேறு சிகிச்சை வசதிகள், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையின் தரம் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அங்கிருந்த தாய்மார்களிடம் நலம் விசாரித்த முதல்வர் விஜய், குழந்தைகளை கையில் ஏந்தி கொஞ்சி மகிழ்ந்தார்.
1974ஆம் ஆண்டு ஜூன் 22 அன்று இந்த எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தான் விஜய் பிறந்துள்ளார்.

முன்னதாக நடிகராக இருந்த காலகட்டத்தில் தனது பிறந்தநாளை பலமுறை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் கொண்டாடியுள்ள விஜய், பிரசவ வார்டில் இருந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |