பாஜகவை கழற்றி விட தயாராகும் அதிமுக? சந்தேகத்தை கிளப்பும் திருமாவளவன்
பாஜகவை கழற்றி விட அதிமுக தயாராகிறதா என்ற கேள்வியை திருமாவளவன் எழுப்பியுள்ளார்.
திருமாவளவன்
திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விஜய் கரூருக்கு சென்றால் அவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது என பாஜக தலைவர் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளை பேசுவது அவருக்கு வாடிக்கையாக உள்ளது. சமூக பதற்றதை ஏற்படுத்த வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்.
விஜய் மக்கள் செல்வாக்கோடு இருக்கக்கூடிய தலைவராக இருக்கக்கூடிய சூழலில் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய சூழல் என்ன உள்ளது என்பதை அண்ணாமலை தான் விளக்க வேண்டும்" என பேசினார்.
பாஜகவை கழற்றி விடும் அதிமுக?
அதிமுக தவெக கூட்டணி அமையும் என்ற பேச்சு எழுந்துள்ளது, இது திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இது ஒரு யூகமான கேள்வி. அதிமுக தரப்பிலே பரப்புகின்ற வதந்தி.
அவர்கள் ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியில் உள்ள போது, தமிழக வெற்றிக் கழகம் அந்த கூட்டணிக்கு எப்படி வரும் என்ற கேள்வி எழுகிறது. ஏனென்றால் விஜய், பாஜகவின் கொள்கை எதிரி என்று அறிவித்திருக்கிறார்.
அப்படியிருக்கும் போது, பாஜக, அதிமுக, தவெக கட்சிகள் கூட்டணியில் இருக்குமா? இல்லையென்றால் பாஜகவை கழற்றிவிட்டு, அதிமுக வெளியே வர தயாராக இருக்கிறதா என்ற இன்னொரு கேள்வியும் எழுகிறது. அப்படி நடந்தால் ஒரு கூட்டணிக்கு கூட நம்பகத்தன்மையற்ற கட்சியாக அதிமுக உள்ளதா என்ற கேள்வி எழுகிறது" என பதிலளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |