எனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி தடுக்கப்பட்டது - ரகசியம் பகிர்ந்த திருமாவளவன்
thirumavalavan says got central minister offer in 2009: எனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவி தடுக்கப்பட்டதாக திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவனுக்கு தடுக்கப்பட்ட அமைச்சர் பதவி
மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமாரவேலை ஆதரித்து தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தனக்கு கிடைக்க வேண்டிய மத்திய அமைச்சர் பதவி தடுக்கப்பட்டது என பேசியுள்ளார்.
இதில் அவர் பேசியதாவது, "நாம் எதிர்க்கிற பாஜக கூட சிறிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து, அதிகாரத்தை பகிர்ந்தளிக்கிறது. காங்கிரஸும் அதிகாரத்தை பகிர்ந்தளித்தது. இதுவரை யாரிடமும் சொல்லாததை சொல்கிறேன்.

2009 ஆம் ஆண்டு முதல்முறையாக நான் திமுக கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஜெயராம் ரமேஷ், ரவிக்குமாரை அழைத்து, உங்கள் தலைவர் திருமாவளவன் வனத்துறை அமைச்சர். சோனியா காந்தி அம்மையார் தேர்வு செய்து விட்டார் என தெரிவித்தார்.
ஆனால் திருமாவளவனை அமைச்சர் ஆக முடியவில்லை. அது தடுக்கப்பட்டு விட்டது என காங்கிரஸ் தரப்பிலே சொல்லப்பட்டது.
நான் மிகவும் மதிக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உள்ளத்தில் அன்பில் இடமிருந்தால் போதும் என சொல்லி விலகினோம்.
டெல்லியில் அதிகார பகிர்வு நடக்கிறது. கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால் , தமிழ்நாட்டில் அப்படி ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் தவெக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்.