ரூ 238 பில்லியன் தொகையை இழந்த ரத்தன் டாடாவின் இந்த நிறுவனம்
டாடா மோட்டார்ஸின் பங்குகள் நெற்று குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளது. அந்த நிறுவனத்தின் பங்கு விலை மும்பை பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 4 சதவீதம் சரிவடைந்து ரூ.655.30 என பதிவானது.
ஜாகுவார் லேண்ட் ரோவர்
ஆனால் இன்று ரூ 673.40 என வர்த்தகம் நடைபெறுகிறது. டாடா மோட்டார்ஸின் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக வெளியான அறிக்கையைத் தொடர்ந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நிறுவனத்திற்கு தோராயமாக 2 பில்லியன் பவுண்டுகள் அதாவது ரூ 238.61 பில்லியன் தொகை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
இந்த சைபர் தாக்குதலால் JLR நிறுவனம் அதன் பல உற்பத்தி ஆலைகளில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது, இதனால் நிறுவனத்தின் நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, இதுபோன்ற சம்பவங்களுக்கு JLR சைபர் காப்பீட்டும் பெற்றிருக்கவில்லை, இது நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கிறது. ஆரம்பத்தில், செப்டம்பர் 24 வரை உற்பத்தி நிறுத்தப்பட்டது, ஆனால் பின்னர் பணிநிறுத்தம் அக்டோபர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, JLR இன் 33,000 ஊழியர்கள் பிரச்சினை தீர்க்கப்படும் வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முந்தைய நிதியாண்டில் JLR இன் வரிக்குப் பிந்தைய லாபம் 1.8 பில்லியன் பவுண்டாக இருந்ததைக் கருத்தில் கொண்டால், 2 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு கணிசமானது என்றே கூறப்படுகிறது.
70 சதவீதம்
மேலும், மதிப்பிடப்பட்ட இழப்பு நிறுவனத்தின் முழு வருடாந்திர வருவாயையும் அழித்துவிடலாம் அல்லது அதை விட அதிகமாக இருக்கலாம் என்றே கூறுகின்றனர்.
டாடா மோட்டார்ஸின் மொத்த வருவாயில் JLR தோராயமாக 70 சதவீதம் பங்களிக்கிறது, இது நிறுவனத்தின் மொத்த வணிகத்திற்கு ஒரு முக்கிய பங்களிப்பாக அமைகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில் JLR நிறுவனம் லாக்டனில் இருந்து சைபர் காப்பீடு பெறும் பணியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் தாக்குதலுக்கு முன்னர் கொள்கை முடிவு எடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில் உற்பத்தி நிறுத்தத்தால் JLR வாரத்திற்கு தோராயமாக 50 மில்லியன் பவுண்டுகள் அல்லது 68 மில்லியன் டொலர் இழப்பைச் சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |