கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தும்... சுற்றுலாவிற்காக இந்த நாட்டில் குவியும் மக்கள்
உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக நீண்ட காலமாகக் கருதப்பட்ட லிபியா, தற்போது சாகச சுற்றுலாப் பயணிகளை மிக அதிக அளவில் ஈர்த்து வருகிறது.
வியக்கத்தக்க அதிகரிப்பு
பல்வேறு உலக நாடுகள் தங்கள் மக்களுக்கு தொடர்ந்து பயண எச்சரிக்கை விடுத்திருந்தும் எண்ணிக்கையில் சரிவு ஏற்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2011ல் முன்னாள் ஜனாதிபதி முயம்மர் கடாபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட ஆபிரிக்க நாடான லிபியா நீண்டகாலமாக உறுதியற்ற தன்மையை எதிர்கொண்டு வந்துள்ளது.
நாட்டில் பல பிரிவுகள் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்ற போட்டியிடுவதோடு, பிராந்தியங்கள் முழுவதும் பரவலான மோதலும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நெருக்கடியான சூழல் இருந்த போதிலும், லிபியாவில் வெளிநாட்டு பயணிகளின் வியக்கத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இது சாகச சுற்றுலா அல்லது கண்மூடித்தனமான சுற்றுலா என்ற சமகால வளர்ந்து வரும் போக்கால் உந்தப்படுகிறது என்றே கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 100,000 சர்வதேச பயணிகள் லிபியாவிற்கு விஜயம் செய்துள்ளனர் என்றே தெரிய வந்துள்ளது.
இருப்பினும், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் லிபியாவிற்கான மிகக் கடுமையான பயண எச்சரிக்கைகளை இன்னும் பராமரிக்கின்றன.
நாட்டைவிட்டு வெளியேறுங்கள்
லிபியாவில் திடீரென்று பயங்கரவாதம், ஆயுத மோதல்கள் மற்றும் கடத்தல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டு அமெரிக்க வெளிவிவகாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில் பாதுகாப்பாக முடிந்தளவுக்கு மிக விரைவாக நாட்டைவிட்டு வெளியேறுங்கள் என்று மிக சமீபத்தில் தங்கள் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
லிபியாவிற்கு எந்த ஒரு பயண நடவடிக்கையும் முன்னெடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று பிரித்தானியா ஆலோசனை வழங்கியுள்ளது. இருப்பினும் பல சுற்றுலாப்பயணிகள் தாங்கள் பாதுகாப்பாக சென்று திருப்பியதாக குறிப்பிட்டிருந்தாலும்,
கடந்த மே மாதம், பிரித்தானிய சுற்றுலாப் பயணி டேனியல் பின்டோ, இராணுவ சோதனைச் சாவடியில் ஏழு மணி நேரம் துப்பாக்கி முனையில் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டபோதிலும், லிபியாவை மர்ம தேசம் என்று அவர் விவரித்தார், மேலும் இந்த சம்பவத்தால் தான் கலங்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |