ஒருநாள் இரவு தங்குவதற்கு நாட்டையே வாடகைக்கு எடுக்கப்பட்ட சம்பவம்.., எங்கு நடந்தது தெரியுமா?
ஹொட்டல் அறைகளை போன்று இரவு தங்குவதற்கு ஒரு நாட்டையே வாடகைக்கு எடுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாடகைக்கு எடுக்கப்பட்ட நாடு
தற்போதைய காலத்தில் ஹொட்டல் அறை முதல் விமானம் வரை பலவற்றையும் நாம் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும், ஒரு காலத்தில் இருந்த ராஜாக்களின் அரண்மனையும் இன்றைக்கு பல்வேறு காரணங்களுக்காக வாடகைக்கு விடப்படுவதை பார்க்க முடிகிறது.
ஆனால், மொத்த நாட்டையே ஒரு நாள் இரவு தங்குவதற்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
ஐரோப்பாவில் சுவிட்சர்லாந்திற்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் உள்ள சிறிய நாடான லிச்சன்ஸ்டைனில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
இங்கு கடந்த 2011 -ம் ஆண்டு வரை ஒரு நாள் இரவு தங்குவதற்கு மொத்த நாட்டையுமே வாடகைக்காக பதிவு செய்யலாம்.
இந்த நாட்டின் மக்கள்தொகை 40,000 பேர் மட்டுமே. இந்த சிறிய நாட்டை ஒரு நாள் இரவுக்கு 70,000 டொலர்களுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளாலாம். அதாவது இந்திய மதிப்பில் 60 லட்சம் ரூபாய் ஆகும்.
இது குறித்து பிரபல சுற்றுலா வலைதளங்களும் தங்குவதற்கான இடமாக குறிப்பிட்டு இருந்தன. நாட்டில் உள்ள சின்னச் சின்ன இடங்களுக்கு விருந்தினர்கள் தடையில்லாமல் அணுகலாம்.
இந்த சேவையானது கடந்த 2011-ம் ஆண்டு முதல் கிடைக்கவில்லை. பல்வேறு காரணங்களுக்காக இந்த சேவையை நிறுத்தியுள்ளனர். ஜியோ ஆல் டே (Geo All Day) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் லிச்சென்ஸ்டீனின் கதை தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |