லண்டனில் அதிக நிலம் வைத்திருக்கும் குடும்பம்: மன்னர் சார்லஸ் குடும்பம் அல்ல
ஒரு வெளிநாட்டு ராஜ குடும்பம், லண்டனில் அதிக நிலத்தை சொந்தமாக வைத்துள்ளது.
அதிக நிலம் வைத்திருக்கும் குடும்பம்
மன்னர் சார்லசைவிட அதிக நிலம் வைத்திருக்கும் அந்தக் குடும்பம், The House of Al-Thani என அழைக்கப்படும் கத்தார் ராஜ குடும்பம் ஆகும்.
லண்டனில் அந்தக் குடும்பத்துக்கு சொந்தமாக 1.8 மில்லியன் சதுர அடி நிலம் உள்ளதாம்.
லண்டனில் அந்தக் குடும்பத்துக்கு சொந்தமாக 2.4 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய ரியல் எஸ்டேட் இருக்கும் நிலையில், அதில் கத்தார் எமிரான Sheikh Tamim bin Hamad Al Thaniயின் பங்கு மட்டும் 1.6 பில்லியன் பவுண்டுகள் ஆகும்.
2.4 மில்லியன் பவுண்டுகள் என்பது, இலங்கை மதிப்பில் 9,69,91,10,40,000.00 ரூபாய் ஆகும்.
மன்னர் சார்லசுக்கு பக்கிங்காம் அரண்மனை உட்பட பல மாளிகைகளும் நிலமும் இருந்தாலும், அவை தனியார் சொத்தாக கருதப்படாது. அவை நாட்டின் சார்பில் மன்னர் குடும்பம் வைத்திருக்கும் சொத்தாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |