இந்தியாவில் பாஸ்போர்ட், விசா தேவைப்பட்ட ஒரே ரயில் நிலையம் - எங்கே தெரியுமா?
இந்தியாவில் நாடு முழுவதும் சுமார் 8,500 நிலையங்கள் உள்ளன. இதனை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர்.
இந்த ரயில் நிலையங்களை பயணிகள் பயன்படுத்த செல்லுபடியாகும் பயணசீட்டு இருந்தால் போதும்.
ஆனால் இந்தியாவில் ஒரு ரயில் நிலையத்தில் மட்டும் உள்ளே நுழையவே பாஸ்போர்ட் மற்றும் விசா தேவைப்பட்டது.
ரயில் நிலையதில் நுழைய பாஸ்போர்ட்
உரிய பாஸ்போர்ட், விசா இல்லாமல் உள்ளே நுழைய முயற்சித்தவர்கள், சிறை உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி ஷாம் சிங் ரயில் நிலையத்தில் இத்தகைய கட்டுப்பாடு இருந்தது.
இது இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இதனை காரணமாக 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்தது.
1972 ஆம் ஆண்டு முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் இந்த ரயில் நிலையத்தின் வழியே இயக்கப்பட்டு வந்தது.

ஜம்மு காஷ்மீரில் இந்தியா 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, 2019 முதல் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அட்டாரி ரயில் நிலையம் இந்தியா பாகிஸ்தான் இடையே முக்கிய போக்குவரத்து இணைப்பு மையமாக இருந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |