இது ஒரு வரலாற்றுத் திருப்பு முனை... ஜேர்மனிக்கு உக்ரைன் புகழாரம்
உக்ரைனுக்கு ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் வருகை புரிந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கு ஜேர்மனி ஆதரவு தெரிவித்தது மற்றும் ரஷ்யாவுடனான எரிபொருள் தொடர்பிலான உறவுகளைத் துண்டிப்பது ஆகிய விடயங்களை வரவேற்றுள்ள உக்ரைன், இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்பு முனை என புகழாரம் சூட்டியுள்ளது.
ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்குப் பின் உக்ரைனுக்கு வந்துள்ள முதல் மூத்த ஜேர்மன் அலுவலர் ஆவார்.
ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை முற்றிலுமாக ஜேர்மனி நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ள Annalena, அது நிரந்தரமான முடிவாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், மீண்டும் உக்ரைன் தலைநகரில் ஜேர்மன் தூதரகத்தையும் திறக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கூடுதலாக 12 Howitzers என்னும் போர் வாகனங்களையும் உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்க உள்ளதாகவும் தெரிவித்த Annalena, அந்த ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான பயிற்சியும் உடனடியாக துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜேர்மனி, அமைதிக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும், இறையாண்மைக்காகவும் நம்முடம் தோளோடு தோளாக நிற்பது, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு திருப்பு முனை என்று கூறியுள்ள உக்ரைன் வெளியுறவு அமைச்சரான Dmytro Kuleba, நான் அதற்காக ஜேர்மன் அரசுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கூறி நெகிழ்ந்தார்.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        