என் அம்மாவுக்கு இதுதான் நடந்தது.., வதந்திகளை பரப்பாதீங்க: பின்னணி பாடகி கல்பனாவின் மகள்
பிரபல பின்னணி பாடகி கல்பனா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த நிலையில் அவரது மகள் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
கல்பனாவின் மகள் மறுப்பு
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பின்னணி பாடகி கல்பனா வசித்து வந்துள்ளார்.
இவரது வீடு சில நாட்களாக திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வீட்டின் கதவை தட்டியும் திறக்கவில்லை.
பின்னர், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கதவை உடைத்த பொலிஸார் சுயநினைவற்ற நிலையில் இருந்த கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தூக்க மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார் என்று கூறினர்.
இதையடுத்து, அவர் ஆபத்து கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பாடகி கல்பனாவின் மகள், தனது அம்மா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், "எனது அம்மாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தற்போது சந்தோஷமாக நலமுடன் இருக்கிறார். அவர் ஒரு பாடகி, பி.எச்.டியும், எல்.எல்.டியும் படித்து வருகிறார்.
தூக்கமின்மை காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். அது தான் ஓவர்டோஸ் ஆகியுள்ளது.
வதந்திகளை பரப்பாதீர்கள். அம்மாவும், அப்பாவும் சந்தோஷமாக இருக்கின்றனர். விரைவில் எனது அம்மா வீடு திரும்புவார். இது விபரீத முயற்சி அல்ல" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |