செல்போன் பேட்டரி வெடிப்பதற்கு முக்கிய காரணம்! இதை மட்டும் செய்யாதீங்க
செல்போன் பேட்டரி வெடிப்பதற்கான காரணத்தை பற்றி செல்போன் நிபுணர் ஒருவர் பகிர்ந்துள்ள தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
காரணங்கள்
செல்போன் வெடிப்பது தொடர்பாக செல்போன் நிபுணர் ஸ்ரீகுமார் கூறுகையில், செல்போன் வெடிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. செல்போனின் மதர்போர்டு பிரச்சனையாக இருக்கும் நேரத்தில், நாம் சார்ஜ் ஏற்றினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
தற்போது, செல்போன் பழுதுபார்க்கும் கடையில் உள்ளவர்களுக்கும் செல்போன் பற்றிய சரியான புரிதல் இல்லை. அவர்களின், கவனக்குறைவால் பல ஆபத்துகள் ஏற்படுகின்றன.
செல்போன் பேட்டரி உப்பலாக இருந்தால் அதை நாம் தவிர்க்க வேண்டும். அதை, ஊசி வைத்து குத்தி மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால், ஓரிரு மாதங்களில் செல்போன் வெடிப்பதற்கான வாய்ப்புண்டு.
நீடித்த நுகர்வு குறித்தும் தரமற்ற அல்லது பாதுகாப்பற்ற செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை வாடிக்கையார்களுக்கு, ஊழியர்கள் ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
இதை செய்யக் கூடாது
*உங்களது மொபைல் போன் சார்ஜ் ஏறிக்கொண்டிருக்கும் போதே அதனை பயன்படுத்தக் கூடாது.
* பவர் பேங்க் போன்ற சாதனங்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அதனை பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்தினால் பவர் பேங்க் மூலம் ஆபத்து ஏற்படலாம்.
*வழக்கமாக சார்ஜ் ஏறும் நேரத்தை விட அதிகமாகவோ, குறைவாகவோ சார்ஜ் ஏறினாலோ அல்லது பேட்டரி உப்பலாக இருந்தாலோ, உங்கள் பேட்டரியில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
* உங்கள் குழந்தைகளின் கைகளில் செல்போன் கிடைக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
* மல்டிபின் சார்ஜ் செய்தாலும் ஆபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
* 100% சார்ஜ் ஏறிய பின்பு மட்டுமே செல்போனை பயன்படுத்துங்கள். அதே போல, 20% குறைவாக இருந்தால் மட்டுமே சார்ஜ் ஏற்றுங்கள்.
* செல்போன் வெப்பமாக இருக்கும் போது இன்டெர்னல் ஸ்டோரேஜை கிளியர் செய்யுங்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |