உலகிலேயே புத்தாண்டை கடைசியாக வரவேற்கும் நாடு எது தெரியுமா?
உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் இன்று எந்த பாகுபாடுமின்றி புத்தாண்டு தினத்தை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல், Omicron ஆரம்பம் என 2021ஆம் ஆண்டு ஒருவழியாக முடிவடைந்து புத்தாண்டு பிறந்த தினத்தை உலகில் உள்ள அனைத்து மக்களும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இலங்கையில் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்கியது. இதே போல் பல நாடுகளில் பல்வேறு நேரங்களில் புத்தாண்டு ஆரம்பமாகிறது. ஒரு சில நாடுகளில் இன்னும் புத்தாண்டு தொடங்கவே இல்லை.
இந்நிலையில் சிறிய பசிபிக் தீவு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகியவை புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடுகளாக கருதப்படுகின்றது.
இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு இந்த நாடுகளில் புத்தாண்டு பிறந்தது. அந்த வகையில் ஜனவரி 1, மாலை 5.50 மணிக்கு பேக்கர் தீவு புத்தாண்டை கொண்டாடுகிறது.
இந்த நாடு தான் புத்தாண்டை கொண்டாடும் கடைசி நாடாகும்.ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி வருகின்றனர்.