பாஜகவில் இணைந்தது இதனால் தான்.., திடீரென ராதிகா சரத்குமார் கொடுத்த பேட்டி
நடிகர் ராதிகா சரத்குமார் பாஜகவில் இணைந்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ராதிகா பேட்டி
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராதிகா சரத்குமார் பேசுகையில், "நான் முதல்முறை வேட்பாளராக போட்டியிட்டாலும் எல்லா இடத்திலும் மக்கள் அன்பை காட்டுகிறார்கள். தங்களுடைய பிரச்சனைகளை பெண்கள் கூறுகின்றனர். இதனால், நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
என்னுடன் போட்டியிடும் சக போட்டியாளர்களை பற்றி நான் சிந்திக்கவில்லை. நான் எங்களுடைய போஜனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடத்தில் கொண்டு செல்லவும் முயற்சி செய்து வருகிறேன்" என்றார்.
மேலும் அவரிடம் பாஜகவவில் நீங்கள் ஏன் இணைந்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "ஏன் நான் பாஜகவில் சேரக்கூடாதா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |