இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வராது... ரிஸ்க் எடுப்பது குறித்து நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்: அமெரிக்க பிரபலம்
இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வராது. ஆகவே, எந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பது என நீங்களே முடிவு செய்துகொளுங்கள் என்கிறார் அமெரிக்க மருத்துவரான Dr. Anthony Fauci.
அவர் கூறுவது கொரோனா தொற்றைக் குறித்து...
இந்த கொரோனா ஒழியப்போவதும் இல்லை, அது முற்றிலும் காணாமல் போகப்போவதும் இல்லை என்று கூறியுள்ள Fauci, ஆகவே, விருந்து நிகழ்ச்சிகளுக்கோ, விழாக்களுக்கோ செல்பவர்கள் தாங்கள் எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கப்போகிறார்கள் என்பதை தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்கிறார்.
சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரபபலங்கள் பலருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.
ஆகவே, ஒருவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, தங்கள் வயது, தாங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஒருவருடன் வாழ்கிறோமா என்பது போன்ற விடயங்களை கவனத்தில் கொள்வது நல்லது என்கிறார் Fauci.
நாம் எப்போதுமே சமுதாயத்தில் சிறிதளவு கொரோனா வைரஸுடன்தான் வாழப்போகிறோம் என்று கூறும் Fauci, ஆகவே, உங்கள் பாதுகாப்புக்காக தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.
அமெரிக்காவைப் பொருத்தவரை, Omicron துணைவைரஸான BA.2 காட்டுத்தீயைப் போல வேகமாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.