இந்த ஒரு விடயம் போதும்.. இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்யலாம்: பிரேமலதா விஜயகாந்த் உறுதி
சட்டமன்றத்தில் திமுக அமைச்சர் பதிவு செய்த கருத்து குறித்து பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
பிரேமலதா பேசியது
தேமுதிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த பிரேமலதா விஜயகாந்த் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழகத்தில் கள்ளச்சாராயத்தில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், திமுகவில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் பேசும்போது ‘சரக்கில் கிக் இல்லாததால் தான் மக்கள் கள்ளச்சாராயம் நோக்கி செல்கின்றார்கள்" என்றார்.
முதலமைச்சர் முன்னிலையில் திமுக அமைச்சர் இவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது. எது நல்ல ஆட்சி, நமக்கான நல்ல தலைவர் யார் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
மதுபானம் குறித்து அமைச்சர் பேசிய இந்த ஒரு சான்று போதும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்வதற்கு. சாராயத்தை விட கள் உடலுக்கு நல்லது . ஆனால், அதில் லாபம் இல்லை என்பதால் அரசு அதன் மீது அக்கறை காட்டுவதில்லை.
மதுபானம் குறித்து முன்பு கனிமொழி விமர்சனம் செய்வார். ஆனால், இப்போது ஏன் பயப்படுகிறார்?" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |