இப்படி செய்தால்... ரஷ்யா-சீனாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம்! டிரம்ப் கொடுத்த ஐடியா
ரஷ்யா-சீனாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, மற்ற நாடுகளில் இதில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனினும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இதன் விளைவாக, ரஷ்யாவின் பங்கு சந்தை மற்றும் ரூபிள் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.
இந்நிலையில், ரிபப்ளிக்கன் தேசிய கமிட்டி நன்கொடையாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா-சீனாவை மோதலில் ஈடுபட வைக்கும் யோசனையை தெரிவித்துள்ளார்.
அதாவது, அமெரிக்கா அதன் F-22 விமானங்களில் சீன கொடியை பறக்க விட்ட படி, ரஷ்யா மீது குண்டு வீச வேண்டும்.
பின், நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை, சீன தான் நடத்தியது என அமெரிக்க கூற வேண்டும்.
பிறகு ரஷ்யா-சீன இடையே மோதல் வெடிக்கும், நாம் அதை வேடிக்கை பார்க்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.