நாக்கால் மின்விசிறியை நிறுத்தி சாதித்த பெண்! உலகின் மிகச்சிறிய பாடிபில்டர்.. 2021ம் ஆண்டின் தலைசிறந்த உலக சாதனைகள்
2021 ஆண்டின் தலைசிறந்த உலக சாதனைகள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.
உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் சாதனை
26வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். 3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனை படைத்துள்ளார்.
தண்ணீரில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சு விடமால் இருந்த சாதனை
குரோஷியாவைச் சேர்ந்த புத்மிர் சோபத் (Budmir Sobat) என்பவர் (56 வயது), தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார். இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 24 நிமிடம் பிறகு 3 வினாடிகள் வரை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் தாக்குப்பிடித்த சாதனையாளராக இருந்த இவரின் சாதனை சாதனையையே அவர் முறியடித்துள்ளார்.
நாக்கால் மின்விசிறியை நிறுத்தி சாதித்த பெண்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோ எல்லிஸ் (Zoe Ellis) என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
7 வினாடிகளில் 10 முகமூடிகள் அணிந்து சாதனை
ஜார்ஜ் பீல் என்பவர் சாதனை படைத்துள்ளார். முகத்தில் வேகமாக முகக்கவசம் அணிந்து சாதனை செய்தார். வெறும் 7.35 வினாடிகளில் 10 முகமூடிகளை முகத்தில் போட்டு உலக சாதனை படைத்துள்ளார்.
மின்சார துரப்பணத்தை விட சத்தமாக ஒலி எழுப்பி சாதனை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவில் ஷார்ப் (Neville Sharp), 112.4 டெசிபல் ஒலி எழுப்பியதன் மூலம் பத்தாண்டுகள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார்.