மைதானத்தில் சிக்ஸர் மழை! திசார பெரேராவின் தலைமையில் டாக்கா அணி மிரட்டல் வெற்றி
வங்காள பிரீமியர் லீக் போட்டியில், டாக்கா கேபிட்டல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிட்டாகாங் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.
149 இலக்கு
BPL டி20 தொடரின் இன்றையப் போட்டியில் சிட்டாகாங் கிங்ஸ் மற்றும் டாக்கா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சிட்டாகாங் கிங்ஸ் (Chittagong Kings) 6 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக நயீம் இஸ்லாம் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய திசார பெரேராவின் டாக்கா அணியில் லித்தன் தாஸ் 25 ஓட்டங்களிலும், ஷஹரியர் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
டன்ஸித் ஹசன் வாணவேடிக்கை
ஆனால் தொடக்க வீரர் டன்ஸித் ஹசன் வாணவேடிக்கை காட்டினார். நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அதிவேக அரைசதம் கடந்தார்.
டன்ஸித்தின் ருத்ர தாண்டவத்தில் டாக்கா கேபிட்டல்ஸ் (Dhaka Capitals) அணி 18.1 ஓவரில் 149 ஓட்டங்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இறுதிவரை களத்தில் நின்ற டன்ஸித் ஹசன் (Tanzid Hasan) 54 பந்துகளில் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் 90 ஓட்டங்கள் குவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |