2015 அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு தப்பி வந்தவர்கள்: இப்போது அவர்கள் நிலை என்ன?
சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடந்ததால், 2015ஆம் ஆண்டு அங்கிருந்து ஏராளமான அகதிகள் பல்வேறு நாடுகளை நோக்கி உயிர் தப்ப ஓடினர். அப்படி உயிருக்கு பயந்து ஓடியவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு புகலிடம் கொடுத்தவர் ஜேர்மன் முன்னாள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல்.
அவர்களுடன் கூட, அந்த காலகட்டத்தில் ஜேர்மனிக்கு அகதிகளாக வந்தவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு வந்தவர்கள் நிலை என்ன?
2015 அகதிகள் பிரச்சினையின்போது ஜேர்மனிக்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் இப்போது வேலையில் இருப்பதாக, the Institute for Employment Research (IAB) என்னும் அமைப்பு சமீபத்தில் நிகழ்த்திய ஆய்வு ஒன்றின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
Copyright Bernd von Jutrczenka/AP
அவர்கள் ஜேர்மனிக்கு வந்தபோது, பல்வேறு காரணங்களால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. அவர்களில் 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களுக்கே அந்த ஆண்டில் வேலை கிடைத்தது.
ஆனால், ஆறு ஆண்டுகளில் அவர்களில் 57 சதவிகிதத்தினருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஏழு ஆண்டுகளில் 63 சதவிகிதத்தினருக்கும், எட்டு ஆண்டுகளில் 68 சதவிகிதத்தினருக்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. என்றாலும், வேலை பெற்றவர்களில் பெண்கள் குறைவே என்கிறது அந்த ஆய்வு.
2022ஆம் ஆண்டில், சிரியா, ஆப்கானிஸ்தான், துருக்கி மற்றும் ஈராக்கிலிருந்து வந்தவர்களில் 244,000 பேர் ஜேர்மனியில் புகலிடம் கோரினார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், அகதிகளுக்காக நாட்டைத் திறந்துவிட்டதற்காக அந்த காலகட்டத்தில் ஏஞ்சலா மெர்க்கல் பெருமளவில் புகழப்பட்டாலும், பின்னர் அகதிகள் பிரச்சினையே அவரது பதவிக்கு உலை வைக்கும் அளவுக்கு பெரிதானது. ஒரு கட்டத்தில், எதிர்ப்புகள் காரணமாக வெறுத்துப்போய், இனி சேன்ஸலர் பதவிக்கு போட்டியிடப்போவதில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார் அவர்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |