சமையலுக்கு எரிவாயு இல்லை... உக்ரைன் முடிவால் பரிதவிக்கும் 51,000 குடும்பங்கள்
ஐரோப்பிய நாடான மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு பிராந்தியத்தில் சமையலுக்கு எரிவாயு இல்லாமல் 51,000 குடும்பங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் வழியாக
எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளதால் 1,500 குடியிருப்பு வளாகங்கள் கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ள முடியாத நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் ரஷ்யா உடனான எரிவாயு ஒப்பந்தங்களை உக்ரைன் புதுப்பிக்க மறுத்த நிலையிலேயே மால்டோவா பிராந்தியம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள ரஷ்ய மொழி அதிகமாக பேசப்படும் Transdniestria பிராந்தியம் கடந்த பல தசாப்தங்களாக உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயுவைப் பெற்று வந்தது.
இதன் மூலமாக உருவாக்கப்படும் மின்சாரத்தை மால்டோவாவிற்கு விற்பனை செய்து வந்துள்ளதுடன், பிராந்தியத்தின் 80 சதவீத மின் தேவையையும் பூர்த்தி செய்து வந்துள்ளது.
ஆனால் தற்போது எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளதால், Transdniestria நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், 122 குடியிருப்பு பகுதிகள் தற்போது எரிவாயு விநியோகம் இல்லாமல் விடப்பட்டுள்ளது என்றும், சில பகுதிகளுக்கு மிகவும் குறைவான அளவு எரிவாயு சமையலுக்கு என மட்டும் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்
இதனிடையே, எரிவாயு பற்றாக்குறை இருப்பதால் குறைந்தபட்சம் 131 பாடசாலைகள் மற்றும் 147 மழலையர் பள்ளிகளும், தற்போதைய விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டாம் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புத்தாண்டோடு ரஷ்ய எரிவாயு நிறுத்தப்பட்டதால், மால்டோவா அதன் எரிசக்தி தேவையில் 60 சதவீதத்தை அண்டை நாடான ருமேனியாவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் அதன் மின் தேவையை பூர்த்தி செய்துள்ளது.
மட்டுமின்றி, எரிசக்தி நெருக்கடிக்கு ரஷ்யாவின் எரிவாயு ஏற்றுமதி நிறுவனமான Gazprom மீது மால்டோவா அரசாங்கம் குற்றம் சாட்டியது. மாற்று வழியூடாக மால்டோவாவுக்கு எரிவாயு விநியோகம் செய்ய Gazprom மறுத்துள்ளதே காரணமாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |