கட்டுமான வேலைகளுக்கு விண்ணப்பித்த வெளிநாட்டவர்கள்... போர் களத்தில் தள்ளிவிட்ட ரஷ்யா
ரஷ்யாவில் மாதத்திற்கு 1,900 பவுண்டுகள் சம்பளத்திற்கு கட்டிட வேலைகளுக்காக விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான கியூபா நாட்டவர்கள் போர் களத்தில் தள்ளிவிடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போர் முனைக்கு
அவர்கள் அனைவரும் பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள். ரஷ்யாவில் அதிக ஊதியம் பெறும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதாகவும், உக்ரேனிய குண்டுவீச்சினால் சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்வதாகவும் உறுதியளிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் உண்மையில் அந்த ஆண்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைனில் உள்ள போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது பாதி பேர் ஒரு வருடத்திற்குள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
ரஷ்யர்கள் அவர்களிடம் வலியையோ இரக்கத்தையோ உணர முடியாது என்றும் போர்க்களத்தில் ரோபோக்களைப் போல இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள்.
ரஷ்யாவில் தரையிறங்கியவர்கள் லொறியில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். உணவு அல்லது தண்ணீர் எதுவும் கொடுக்கப்படவில்லை. நீண்ட பயணத்திற்குப் பிறகு, ஆயுதமேந்திய பொலிசாரால் பாதுகாக்கப்பட்ட ஒரு கைவிடப்பட்ட விளையாட்டுப் பள்ளியை அடைந்துள்ளனர்.
10 நாட்கள் கொடூரமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் போர் முனையில் அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். இதுவரை 20,000 கியூபர்கள் ரஷ்யாவில் சிக்கியுள்ளதாகவும்,
உக்ரைன் உளவு அமைப்புகளின் தரவுகளின் அடிப்படையில் சுமார் 7,000 கியூபர்கள் போதுமான பயிற்சி ஏதுமின்றி போர் முனையில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, 106 நாடுகளைச் சேர்ந்த குறைந்தது 8,425 வெளிநாட்டு கூலிப்படையினர் ரஷ்யாவுக்காகப் போராடுவதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |