ஸ்பெயினுக்குள் நுழையும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர்: என்ன காரணம்?
ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழையும் காட்சிகள் அதைச் சுற்றியுள்ள நாடுகளில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

நடந்தது என்ன?
ஸ்பெயின் நாட்டுக்குள் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வோர் நுழைவதாக கூறப்பட்டாலும், உண்மையில், வட ஆப்பிரிக்காவிலுள்ள மொராக்கோ நாட்டை ஒட்டியுள்ள, சியூட்டா என்னும் நகரத்துக்குள்தான் புலம்பெயர்வோர் நுழைந்துள்ளார்கள்.
மொராக்கோ நாட்டிலிருந்து, வெறும் ஒரு கோட்டால் பிரிக்கப்படும் நகரம்தான் ஸ்பெயினுக்கு சொந்தமான இந்த சியூட்டா.

ஆக, மொரக்கோவிலிருந்து, அதை ஒட்டியுள்ள சியூட்டா நகரத்துக்குள்தான் புலம்பெயர்வோர் நுழைந்துள்ளார்கள்.
மொராக்கோ நாட்டவர்கள் அடிக்கடி இப்படி சியூட்டா நகருக்குள் நுழைய முயல்வது உண்டு. விடயம் என்னவென்றால், இம்முறை, சுமார் 49,000 பேர் ஒரே நேரத்தில் சியூட்டாவுக்குள் நுழைந்ததால்தான் அது உலகின் கவனம் ஈர்த்துவிட்டது.
எதனால் திடீரென புலம்பெயர்வோர் நுழைந்தார்கள்?
முக்கிய விடயம் என்னெவென்றால், மொராக்கோவையும் சியூட்டாவையும் பிரிப்பது ஒரு கோடுதான்.
ஆனால், மொராக்கோ மக்கள் அந்தக் கோட்டைத் தாண்டி சியூட்டாவுக்குள் நுழையவில்லை.

அவர்கள் கடல் வழியாக நீந்தி சியூட்டாவுக்குள் நுழைந்துள்ளார்கள். அப்படி கடலில் நீந்தும்போது சுமார் 18 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெறும் ஒரு கோட்டைத் தாண்டி சியூட்டாவுக்குள் நுழையமுடியும்போது, ஏன் இப்படி உயிரைப் பணயம் வைத்து மக்கள் கடல் வழியாக நீந்தி வருகிறார்கள்.
அதாவது, சமீபத்தில் ஸ்பெயின் உச்சநீதிமன்றம், புலம்பெயர்தல் தொடர்பான வழக்கொன்றில், கடல் வழியாக சியூட்டாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை திருப்பி அனுப்ப முடியாது என தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பின் தாக்கம்தான் இந்த திடீர் புலம்பெயர்தலின் பின்னணியாக இருக்கக்கூடும் என ஸ்பெயின் பிரதமரான பெட்ரா சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.

ஆக, ஸ்பெயினுக்குள், அதாவது, ஸ்பெயினுக்கு சொந்தமான சியூட்டா நகருக்குள் நுழைந்த மொராக்கோ நாட்டவர்களான புலம்பெயர்ந்தோரை தற்காலிகமாக தங்கவைத்துவிட்டு, ஸ்பெயினில் தங்க சட்டப்படி அனுமதி இல்லாதவர்கள் என கருதப்படுவோரை மொராக்கோ நாட்டுக்கே திருப்பி அனுப்ப திட்டமிட்டுவருவதாக ஸ்பெயின் பிரதமரான பெட்ரா சான்ச்செஸ் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |