ரஷ்யாவால் அச்சுறுத்தல்: ஜேர்மனி எடுத்துள்ள நடவடிக்கை
ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் ஜேர்மனி பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைத் துவக்கியுள்ளது.
ரஷ்யாவால் அச்சுறுத்தல்
ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகளுக்கு போர் அச்சத்தை உருவாக்கியுள்ளதை மறுப்பதற்கில்லை.
ஜேர்மனியும், ரஷ்யாவால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற எண்ணம் காரணமாக முன்னெச்சரிக்கையாக சில பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துவக்கியுள்ளது.
ஜேர்மன் ராணுவத்தின், Iris-T air-defence system என்னும் பாதுகாப்பு அமைப்பை நேற்று ஜேர்மனி நிறுவியுள்ளது.
ராக்கெட்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்வதற்காக இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
ரஷ்யா, ராக்கெட்கள், ஏவுகணைகள் முதலான ஆயுதங்களை அதிகரித்தவண்ணம் உள்ளது என்று கூறியுள்ள ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், அதைப் பார்த்தும் பாராதது போல் இருக்கமுடியாது என்று கூறியுள்ளார்.
அப்படி கவனக்குறைவாக இருந்தால், அது அமைதிக்கு பங்கம் வகிக்கும் நிலையை உருவாக்கிவிடும் என்றும், தன்னால் அதை அனுமதிக்கமுடியாது என்றும் கூறியுள்ளார் ஷோல்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |