பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்ததில் ராணுவ வீரர்கள் மூவர் பலி! பலர் காயம்
இந்திய மாநிலம் அருணாச்சல பிரதேசத்தில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஆழமான பள்ளத்தாக்கில்
அருணாச்சலப் பிரதேசம் Upper Subansiri மாவட்டத்தில் ராணுவ வீரர்களுடன் லொறி ஒன்று சென்று கொண்டிருந்தது.
தபி கிராமத்திற்கு அருகில் உள்ள டிரான்ஸ் அருணாச்சல நெடுஞ்சாலையில் லொறி சென்றபோது, திடீரென சாலையைவிட்டு விலகி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதில் ராணுவ வீரர்கள் மூன்று உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக பொதுமக்கள் விரைந்து காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மூவர் பலி
ஹவில்தார் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆஷிஷ் குமார் ஆகியோர் உயிரிழந்தவர்கள் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விபத்திற்குள்ளான ராணுவ லொறி, பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத் தொடரணியின் ஒரு பகுதியாகும்.
இந்த விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், Upper Subansiri மாவட்ட தலைமையகமான Daporijo-வில் இருந்து லெபரடா மாவட்டத்தில் உள்ள Basar நோக்கி வாகனத் தொடரணி சென்றுகொண்டிருந்தபோது விபத்து நேர்ந்தது என தெரிவித்தார்.
முதலமைச்சர் பெமா காண்டு வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், "Upper Subansiri மாவட்டத்தில் உள்ள தாபி அருகே நடந்த ஒரு சோகமான விபத்தில் ஹவில்தார் நகாத் சிங், நாயக் முகேஷ் குமார் மற்றும் கிரெனேடியர் ஆஷிஷ் குமார் ஆகிய மூன்று @adgpi பணியாளர்களின் உயிரிழப்புகளால் நான் மிகவும் வேதனைப்படுகிறேன். தேசத்திற்கான அவர்களின் சேவை மற்றும் உயர்ந்த தியாகம் உயரிய வணக்கங்களுடன் நினைவுகூரப்படும். இறந்துபோன குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். துணிச்சலான ஆன்மாக்கள் சாந்தியடைய நான் புத்தரைப் பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |