ரஷ்யாவுக்குள் அதிரடி காட்டும் உக்ரைன் படைகள்... ஜெலென்ஸ்கியின் திட்டம் இதுதான்
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சேம் நதி மீது அமைந்துள்ள மூன்றாவது பாலத்தையும் உக்ரைன் படைகள் தகர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திட்டத்தின் ஒருபகுதி
இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் திட்டத்தின் ஒருபகுதி என்றும், ரஷ்யாவுக்குள் உக்ரைன் ராணுவத்திற்கான பாதுகாப்பு மிகுந்த பகுதியை உருவாக்கும் நடவடிக்கை இதுவென்றும் கூறப்படுகிறது.
சேம் நதி மீது அமைந்துள்ள மூன்றாவது பாலமும் சேதமடைந்துள்ளதாக ரஷ்யா அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஏற்கனவே வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் சேம் நதி மீது அமைந்திருந்த பாலங்கள் தகர்க்கப்பட்டன.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய நகரமான சுட்ஜாவை சுற்றி தங்கள் படைகள் முன்னேறும் என உக்ரைன் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை வெற்றிபெறும் என்றால், உக்ரைன் மேலும் 700 சதுர கி.மீ தொலைவுக்கான நிலப்பரப்பை கைப்பற்றும் என்றே கூறப்படுகிறது. திங்களன்று ரஷ்யாவின் Snagost மற்றும் Apanasovka ஆகிய இரு கிராமங்களை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
பாதுகாக்க முடியாமல் போகும்
ஆனால் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் அதிரடியாக முன்னேறி வருவதை ரஷ்யாவால் தடுக்க முடியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
திங்களன்று உக்ரைனின் Niu-York நகரை கைப்பற்றியுள்ள ரஷ்யா, தங்கள் நாட்டு கொடியை ஏற்றியதுடன் Novgorodske என நகரத்திற்கு பெயர் மாற்றம் செய்துள்ளது. மேலும், Pokrovsk பகுதியின் சுற்றுவட்டாரத்தில் ரஷ்யா பல மாதங்களாக உக்கிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இப்பகுதி ரஷ்யா வசம் சிக்கும் என்றால், உக்ரைன் படைகளுக்கு Donbas பிராந்தியத்தை பாதுகாக்க முடியாமல் போகும் ஆபத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2014 முதல் Donbas பிராந்தையத்தை கைப்பற்ற ரஷ்யா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |