பயிற்சியின் போது நடந்த விபரீதம்... இராணுவ வீரர்கள் பரிதாப பலி! நீடிக்கும் மர்மம்
வட ஆப்பிரிக்கா நாடான துனிசியாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு துனிசியாவில் உள்ள Gabes மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரவில் நடந்த இராணுவ பயிற்சியின் போது இச்சம்பவம் நடந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரை மேற் கோள்காட்டி அரசு ஊடகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு இராணுவ தொழில்நுட்ப குழு அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், விபத்தில் உயிரிழந்தவர்களின் வீரர்களின் விபரம் குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை.