விஜய்க்கு யோசனை தரும் மூவர் குழு (காணொளி)
கரூர் துயர சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை குறித்து மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீஃப் பேசியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் மூன்றுவிதமான வழக்குகள் விசாரணைக்கு வந்தன; அதில் இரண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை, மற்றொன்று சிபிஐ விசாரணை கேட்டது.
நீதிபதி இந்த வழக்கில் நீங்கள் யார் என்று கேட்டபோது, பொதுநல வழக்கிற்காக வந்திருப்பதாக வழக்கறிஞர் கூறுகிறார்.
அதனை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதி தள்ளுபடி செய்தார். அடுத்து முன்ஜாமீன் வழக்கு; அதில் ராகவாச்சாரி தவெக தரப்பில் சிறப்பாக வாதாடினார். அவர் கூறியதை இங்கே திரித்து வெளியிட்டனர்.
அதே சமயம் எதிர்தரப்பில் வாதாடியவர்கள், இவர்கள் எந்தவித வருத்தமும் தெரிவிக்கவில்லை. எந்த உறுத்தலும் இல்லை எனக் கூறினர்.
நீதிமன்றம் எதைப்பார்க்கும் என்றால், ஒரு அஞ்சலி கூட்டமோ அல்லது நிவாரணம் வழங்கியது அல்லது தொண்டர்கள் அங்கு சென்று பார்த்தார்களா என்பதைத் தான் பார்க்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க