மகளிர் மட்டும் பீச்! பெண்களுக்காக பிரத்தியேகமாக மூன்று புதிய கடற்கரைகள் திறப்பு
ஷார்ஜா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இது ஒரு அற்புதமான செய்தி வெளியாகியுள்ளது.
மகளிர் மட்டும் பீச்!
பொதுவாக, கடற்கரைகளை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பார்வையிடலாம். ஆனால் சில பெண்கள் தனியுரிமையை விரும்புகிறார்கள். இதனால், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெண்களுக்கு மட்டும் சில கடற்கரைகள் உள்ளன.
இந்நிலையில், சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான ஷேக் டாக்டர். சுல்தான் பின் முகமது அல் காசிமி மேலும் 3 கடற்கரைகளை பெண்களுக்கு மட்டும் திறந்து வைக்கிறார்.
Creator: Marco Di Fabio
|
Credit: Flickr Vision
மூன்று புதிய கடற்கரைகள் திறப்பு
இப்போது, அல் ஹம்ரியா கடற்கரையின் ஒரு பகுதி பெண்களுக்காக மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கான வசதி மற்றும் தனியுரிமையின் உயர் தரத்தின்படி கல்பா மற்றும் கோர்பகானில் மேலும் 2 'மகளிர் மட்டும்' கடற்கரைகள் ஒதுக்கப்படுகிறது.
ஷேக் டாக்டர். சுல்தான் பின் முகமது அல் காசிமி, அல் ஹம்ரியா, கல்பா மற்றும் கோர்பகான் கடற்கரைகளில் பெண்கள் மட்டும் அனுபவிக்கும் வகையில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
AP
மேலும், அல் மடா பாலைவனத்தில் உள்ள ஒரு சுற்றுலா தளமான கிராமம் மணலால் மூடப்பட்டிருப்பதால், அந்த புதைக்கப்பட்ட கிராமம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார். ஷார்ஜா தகவல் அமைச்சகத்தின் 'டைரக்ட் லைன்' திட்டத்தின் மூலம் இந்த வியங்கள் அறிவிக்கப்பட்டன.
Women Only Beach, United Arab Emirates, Sharjah
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |