மொத்த குடும்பமும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை! சிக்கிய கடிதம்
இந்தியாவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மொத்த பேரும் ரயில் முனால் தலை வைத்து பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 சடலங்கள் மீட்பு
கர்நாடக மாநிலத்தின் சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மூவரும் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்தது தெரிந்தது. இது குறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா - புஷ்பலதா தம்பதி மற்றும் அவர்களின் மகள் தாக்ஷாயினி என தெரியவந்துள்ளது.
tv9kannada
தீவிர விசாரணை
இதில் மைலராப்பா கூலி வேலை செய்து வந்திருக்கிறார். இறப்பதற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில், ரேஷன் அரிசியில் எங்களுக்கு ப்ளாஸ்டிக் அரி தான் வழங்கப்பட்டது. எங்கள் மீது எந்த தவறுமில்லை, எங்களின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருந்த வார்த்தைகள் குழப்பதை ஏற்படுத்தி இருப்பதால் பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது சிலருடன் தகராறு செய்து தற்கொலை செய்து கொண்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.