மாதம் ஒரு முறை டெல்லிக்கு பயணிக்கும் மூன்று திருடர்கள்: ஒரு சுவாரஸ்ய செய்தி
புதுடெல்லியிலுள்ள ஒரு வீட்டில் பணமும் நகைகளும் திருட்டுப் போனதாக பொலிசாருக்கு புகாரளித்தார் வீடு ஒன்றின் உரிமையாளர்.
பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மூன்று பேர் சிக்கினார்கள். விசாரணையின்போது அவர்கள் சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றைத் தெரிவித்தார்கள்.
ஒரு சுவாரஸ்ய செய்தி
புது டெல்லியிலுள்ள விஜய் விஹார் என்னுமிடத்தில் நடந்த ஒரு திருட்டைத் தொடர்ந்து CCTV கமெரா காட்சிகள் மூலம் ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த மூன்று பேரை பொலிசார் கைது செய்தார்கள்.
சுர்ஜீத் சிங், அனில் சிங் மற்றும் கீர்த்தன் சிங் என்னும் அந்த மூன்று பேரையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்த, விசாரணையில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகின.
அந்த மூன்று பேரும் பூட்டு செய்வதை தொழிலாகக் கொண்டவர்கள். ஆக, தங்கள் தொழிலையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பூட்டப்பட்டுள்ள வீடுகளில் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் அவர்கள்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த மூன்று பேரும், மாதம் ஒரு முறை சுற்றுலா செல்வது போல புது டெல்லிக்கு வருவார்களாம்.
ஹொட்டல் ஒன்றை புக் செய்து தங்கி, மோட்டார் சைக்கிள் ஒன்றைத் திருடி, வரிசையாக, பூட்டப்பட்ட ஒரு 10 வீடுகளின் பூட்டுக்களைத் திறந்து கொள்ளையடித்துவிட்டு தங்கள் ஊருக்கே சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் அவர்கள்.
இம்முறை சிக்கிக்கொண்ட அவர்களிடமிருந்து நகைகள், பணம் மற்றும் பூட்டுகளைத் திறக்க பயன்படும் ஒரு கருவி ஆகியவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |