அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர்களை பிரிந்த 3 பெண்களுக்கு நேர்ந்த நிலை! எச்சரிக்கை செய்தி

money abroad women job
By Raju Jul 17, 2021 09:58 AM GMT
Report

கணவர்களை பிரிந்து வாழ்ந்த 3 பெண்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி (32), வடிவுக்கரசி (38), வள்ளி (35).

மூன்று பேரும் கணவர்களை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குடும்பம் நடத்த இவர்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் தங்களது குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம், குடும்ப கஷ்டங்கள் தீரும் என இவர்களுக்கு ஒருவர் ஆலோசனை கூறியுள்ளார். பின்னர் புரோக்கர் ஒருவர் பக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரேபியர் ஒருவரது வீட்டில் தங்கி வேலைப்பார்க்க மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம், தினமும் வயிறார உணவு என்று சொல்லி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அந்த பெண்களுக்கு ரொட்டியும் தேநீரும் மட்டும் கொடுக்கப்பட்டதாகவும், சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வழங்கப்பட்டதாகவும் கூறபடுகின்றது.

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் வெளிநாட்டு வேலைக்கு சென்ற கணவர்களை பிரிந்த 3 பெண்களுக்கு நேர்ந்த நிலை! எச்சரிக்கை செய்தி | Three Women Faced Issues In Abroad Returns Home

புரோக்கர் தங்களிடம் கூறியது போல 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்டதற்கு அந்த 3 பெண்களில் ஒருவரான வள்ளியை அந்த வீட்டில் உள்ள அரேபியர் துன்புறுத்தியதாகவும், ஆளுக்கு 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து விட்டு ஊருக்கு செல்லும்படி மிரட்டியதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த 6 மாதங்களாகத் தவித்து வந்த 3 பெண்களில் வள்ளி தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து வாட்ஸ் அப் மூலம் இங்குள்ள உறவினர்களுக்கு வீடியோ ஒன்றை அனுப்பி உதவி கோரினார். இங்குள்ள உறவினர்கள் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.

இதனை யூடியூப்பில் பார்த்த பக்ரைனில் வசிக்கும் தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில் என்பவர் தனது அன்னை தமிழ் மன்றம் என்ற தமிழர் நலனுக்கான அமைப்பின் மூலம் தூதரகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.

உடனடியாக காவல் துறையினர் மூலம் அந்த அரேபியர் வீட்டில் பணிப்பெண்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த வள்ளி, வடிவுக்கரசி, வேளாங்கண்ணி ஆகிய 3 பேரும் மீட்கப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான டிக்கெட் மற்றும் பயண செலவுக்கான உதவிகளை செய்து செந்தில் குழுவினர் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை சென்னை வந்த 3 பெண்களும் சொந்த ஊர் திரும்ப காரணமாக இருந்தவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார்கள்.

இதனிடையில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் பாதுகாப்பான ஏஜண்டுகள் மூலம் செல்வதே பாதுகாப்பானது என்றும், இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் மூலம் சென்றால் வீட்டு வேலைக்கான அடிமையாக விற்றுவிடுவார்கள் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US