எனக்கு சல்மான் ருஷ்டியை பிடிக்கவில்லை...குற்றச்சாட்டுகள் மீது நீதிமன்றத்தில் குற்றவாளி வழங்கிய பதில்
- இரண்டாம் நிலை கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார் ஹாடி மாதர்.
- ஜாமீன் இல்லாத தடுப்பு காவலில் வைக்கவும் உத்தரவு
அமெரிக்காவில் நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஹாடி மாதர் Hadi Matar(24) தன் மீது சுமத்தப்பட்ட இரண்டாம் நிலை கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேற்கு நியூயார்க்கில் கடந்த வாரம், தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகத்தால் பல சர்ச்சைகளுக்கு உள்ளான நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி Salman Rushdie (75) மேடையில் பேசிக்கொண்டு இருந்த போது ஹாடி மாதர் Hadi Matar(24) என்ற நபரால் கத்தியால் பல முறை குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
REUTERS
மேலும் சல்மான் ருஷ்டியை தாக்கி நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்து இருந்த நிலையில், வியாழன்கிழமை சௌதாகுவா கவுண்டி கோர்ட் ஹவுஸில் ஹாடி மாதர் இரண்டாம் நிலை கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் ஒப்படைக்கப்பட்டார்.
அதனடிப்படையில் நடந்த விசாரணையின் போது நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியது தொடர்பாக சுமத்தப்பட்ட இரண்டாம் நிலை கொலை முயற்சி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளை ஹாடி மாதர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அத்துடன் நீதிபதி டேவிட் ஃபோலே, ருஷ்டியுடன் எந்தத் தொடர்பும் கொள்ளக்கூடாது என்று மாதருக்கு உத்தரவிட்டதுடன், மாதர் செப்டம்பர் 22-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனத் உத்தரவு பிறப்பித்தார்.
REUTERS
ஹாடி மாதர் தற்போது ஜாமீன் இல்லாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவற்றிக்கு முன்னதாக கடந்த புதன்கிழமை நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட ஒரு நேர்காணலில், தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) என்ற புத்தகத்தின் ஓரிரு பக்கங்களைப் படித்தேன் மற்றும் ஆசிரியரின் YouTube வீடியோக்களைப் பார்த்தேன். எனக்கு அவரைப் பிடிக்கவில்லை என்று ருஷ்டியைப் பற்றி மாதர் கூறியதாக தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: 50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்... தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்
நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கு உலகெங்கிலும் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.