அமெரிக்காவில் புடின் புலி உயிரிழப்பு: சோகத்தில் பூங்கா நிர்வாகம்!
அமெரிக்காவில் உள்ள மினசோட்டா(Minnesota) வனவிலங்கு உயிரியல் பூங்காவில் புடின் என பெயரிடப்பட்ட 12 வயது மதிக்கத்தக்க அமூர் வகை புலி உயிரிழந்து விட்டதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போரானது உலக நாடுகள் மத்தியில் மூன்றாம் உலகப்போர் குறித்து அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்தவேளையில், ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பெயரை கொண்ட 12 வயது மதிக்கத்தக்க அமூர் வகை புலி ஒன்று அமெரிக்காவின் மினசோட்டா(Minnesota) வனவிலங்கு உயிரியல் பூங்காவில் இறந்துள்ளது.
இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள மினசோட்டா(Minnesota) வனவிலங்கு உயிரியல் பூங்கா நிர்வாகம், மருத்துவ குழுவினரின் தீவிர தொடர் முயற்சிக்கு பிறகும், வழக்கமான மருத்துவ நடைமுறைகளின் போது உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது.
Tiger #Putin died in the #USA.
— NEXTA (@nexta_tv) March 25, 2022
A 12-year-old Amur tiger named Putin died at the Minnesota Zoo in the United States. The tiger died suddenly during a medical procedure. https://t.co/AkKwo3vQMK
மேலும் புடினின் இந்த இழப்பு மிகவும் ஆழமானது எனவும், விலங்குகளை பாதுகாக்க பாடுபடும் பூங்கா நிர்வாகிகளுக்கு மிக்க நன்று எனவும் தெரிவித்துள்ளது.
இந்த அமூர் அல்லது சைபீரியன் இன வகைப் புலியானது பொதுவாக ரஷ்யாவின் கிழக்கு எல்லைப் பகுதிகளும், வடமேற்கு சீனாவிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.