மனைவி வேறொரு ஆணுடன் பழகுவதை குழந்தையின் ஐபாட் மூலம் ஒட்டுக்கேட்ட கணவன்... பின்னர் நடந்த பயங்கரம்
அமெரிக்காவில், தன்னை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்ன மனைவி, வேறொரு ஆணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதை குழந்தையின் ஐபாட் மூலம் ஒட்டுக்கேட்ட கணவன், மனைவியையும் அந்த ஆணையும் சுட்டுக் கொன்றார்.
Ali Abulaban (29), டிக் டாக்கில் காமெடி வீடியோக்கள் வெளியிடும் ஒரு பிரபலம். அவரை கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
சமீபத்தில் Aliக்கும் அவரது மனைவி Ana Abulaban (28)க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கணவரை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லியிருக்கிறார் Ana.
வீட்டை விட்டு வெளியேறி ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த Ali, ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லாதபோது வீட்டுக்குள் நுழைந்து, தங்கள் குழந்தையின் ஐபாடில் ஒட்டுக் கேட்கும் ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து வைத்துவிட்டு வெளியேறிவிட்டிருக்கிறார்.
பிறகு ஹொட்டல் அறையிலிருந்து வீட்டில் நடப்பதை ஆப் மூலம் ஒட்டுக்கேட்ட Ali, தன் மனைவி வேறொரு ஆணுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுள்ளார்.
ஆத்திரமடைந்த அவர், மனைவியின் வீட்டுக்குச் சென்று அங்கு தன் மனைவியுடன் இருந்த Rayburn Cadenas Barron (29) என்ற நபரை மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன் மனைவியையும் தலையில் சுட்டிருக்கிறார்.பிறகு தன் தாயை அழைத்து உண்மையைச் சொல்லியிருக்கிறார்.
இருவரும் இறந்ததும் வீட்டை விட்டு வெளியேறிய Ali, பள்ளிக்குச் சென்று தன் குழந்தையை அழைத்துக்கொண்டு காரில் வீடு திரும்பும்போது பொலிசாருக்கும் தகவலளிக்க, பொலிசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். குழந்தைதான் பாவம், தாயையும் தந்தையையும் இழந்து பரிதவிக்கிறாள்.
பொலிசாரிடம், தன் மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறியிருக்கிறார் Ali.
அவரை ஜாமீனில் வெளிவர சிறையிலடைக்கும்படி உத்தரவிட்டுள்ள நீதிபதி, அவரது குழந்தையை சந்திக்கவும் தடை விதித்துள்ளார்.