இன்னொருவர் மனைவியுடன் கையும் களவுமாக சிக்கிய நபர்: துரோகம் செய்த மனைவியை நேரலையில் காட்டிக்கொடுத்த கணவர்
இன்னொருவரின் மனைவியுடன் அமெரிக்கர் ஒருவர் கையும் களவுமாக சிக்க, அவரது செயல்களை நேரலையில் ஒளிபரப்பி அவரது மனைவி மற்றும் பிள்ளைகளிடம் சிக்கவைத்தார் ஒருவர்.
QueenD101 என்ற புனைபெயரில் இருக்கும் அந்த பெண்ணுக்கு ஒரு நேரலை வீடியோ வந்துள்ளது.
அந்த வீடியோவில் ஒருவர் ஒரு ஹொட்டல் அறைக்கதவைத் தட்டுகிறார். அந்த அறைக்கதவைத் திறப்பவர் Queenஇன் கணவர் Anthony. சட்டையில்லாமல் இருக்கும் Anthonyயுடன் ஒரு பெண் அந்த அறையில் தங்கியிருக்கிறார். அவரது பெயர் Amy.
அந்த அறையின் கதவைத் தட்டி, அதை நேரலையில் ஒளிபரப்பியது வேறு யாருமல்ல, சாட்சாத் Amyயின் கணவரேதான். எவ்வளவு நாட்களாக என் மனைவியுடன் நீ சுற்றுகிறாய் என்று கத்துகிறார் Amyயின் கணவர்.
Anthonyக்கும் Amyயின் கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, நீ பேஸ் புக் நேரலையிலிருக்கிறாய், உன் மனைவியும் குழந்தைகளும் இங்கு நடப்பதை நேரலையில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என Amyயின் கணவர் கூற அதிருகிறார் Anthony.
அப்போதுதான் தன் கணவர் தனக்கு துரோகம் செய்வதை அறிந்துகொண்டதாக தெரிவிக்கிறார் Anthonyயின் மனைவி.
Anthonyயின் மனைவி, உறவினர் ஒருவருடன் கணவரைத் தேடி வந்தபோது அவர் அங்கே இல்லை. நேரலையில் கையும் களவுமாக சிக்கியும், உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார் Anthony.
பின்னர் இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், Anthonyயும் Amyயும் கொஞ்ச காலம் சேர்ந்து சுற்றியதாகவும், பின்னர் அவர்களும் பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் Anthonyயின் மனைவி.
அதன் பிறகு, Anthony, Amyயுடன் மட்டுமல்ல, ஏராளம் பெண்களுடன் சுற்றியதாக Amyயே தெரிவித்துள்ளதோடு, அவர் சுற்றிய பெண்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளாராம். அந்த நீள பட்டியலைப் பார்த்த Anthonyயின் மனைவி, நாட்டிலுள்ள ஒரு பெண்ணையும் இந்த ஆள் விட்டுவைக்கவில்லை போல என்கிறார்.
இப்போது Anthonyயின் மனைவி விவாகரத்துக்கு முயற்சி செய்து வருகிறார். அவருக்கு குழந்தைகள் இல்லை, Anthonyக்கு முந்தைய திருமணத்தில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் அவரை அம்மா என்றுதான் அழைக்கிறார்கள்.
ஆனால், தான் அவர்களைப் பெற்ற தாய் அல்ல என்பதால் விவாகரத்தோ, அதற்குப்பின் அந்த குழந்தைகள் தன்னுடன் இருப்பதோ சட்டப்படி எளிதாக முடிவாகிற விடயமல்ல என்பது தெரியவந்து



