டிக் டாக் பிரபலத்தின் வீடியோ மோகம்: கொடூர விலங்கு தாக்கியதில் அப்பாவி இளைஞர் பலி
TikTok Stunt in Lahore Teen Worker killed by Big Cat: லாகூரில் டிக்டாக் வீடியோ எடுத்த போது கொடூர விலங்கு தாக்கி 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டிக்டாக் வீடியோவால் பலியான உயிர்
பாகிஸ்தானின் லாகூர் மாவட்டம் கஹ்னா(Kahna) நகரில் அமைந்துள்ள தனியார் விலங்கு இனப்பெருக்க பண்ணையில் டிக் டாக் வீடியோ படப்பிடிப்பின் போது 19 வயது பண்ணை ஊழியர் கொடூர விலங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
காவல்துறையினர் தெரிவித்த தகவலின் படி, உள்ளூர் டிக்டாக் பிரபலமான நோமன் என்ற நபர் சாகச வீடியோ எடுப்பதற்காக கூண்டில் இருந்த கொடிய விலங்கை வேண்டுமென்றே திறந்து விடப்பட்டுள்ளது.
அப்போது அப்பகுதியில் பணியில் இருந்த தல்ஹா என்ற இளைஞரை விலங்கு ஆக்ரோஷமாக தாக்கியது.

இதில் படுகாயமடைந்த தல்ஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பண்ணை உரிமையாளர் மற்றும் உள்ளூர் டிக்டாக் பிரபலம் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தல்ஹா தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கொடிய விலங்கை வளர்ப்பதற்கான சட்டப்பூர்வ அனுமதியை பண்ணை உரிமையாளர் ஃபயாஸ் வைத்துள்ளாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரம்பத்தில் தல்ஹாவை தாக்கியது புலி என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் உள்ளூர் ஊடகங்களில் அந்த கொடூர விலங்கு சிங்கம் என்று செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.