99 ஓட்டங்களில் ஆட்டமிழந்த கேப்டன்: சொதப்பிய வைபவ் சூர்யவன்ஷி
துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சேப்பாக்கத்தில் நடந்து வரும் துலீப் கிண்ண இறுதிப்போட்டியில் திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுக்க, தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
திலக் வர்மா 99
துலீப் கிண்ண இறுதிப்போட்டியின் நான்காவது நாளில் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

முன்னதாக, தென் மண்டல அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாற, அணித்தலைவர் திலக் வர்மா (Tilak Varma) பொறுப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.
சாமா வி மிலிந்த் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, தென் மண்டல அணி 300 ஓட்டங்களை கடந்தது.
அதன் பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. சாமா 43 ஓட்டங்களில் வெளியேற, திலக் வர்மா 99 ஓட்டங்கள் எடுத்த நிலையில் குரைஷி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
இஷான் கிஷன் அரைசதம்
தென் மண்டல அணி 336 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளும், ஷமி, குரைஷி மற்றும் ஷிகர் மோகன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர் 372 ஓட்டங்கள் முன்னிலையுடன் கிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அபிமன்யு ஈஸ்வரன் 3 ஓட்டங்களில் சிராஜ் பந்துவீச்சில் அவுட் ஆக, வைபவ் சூர்யவன்ஷி 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இறங்கி சிக்ஸர் அடிக்க முயன்ற அவர் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
அடுத்து கைகோர்த்த ஷிகர் கான், இஷான் கிஷன் கூட்டணி வேகமாக ஓட்டங்களை சேர்த்தது. அணித்தலைவர் இஷான் கிஷன் (Ishan Kishan) அரைசதம் அடித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |