சிக்ஸர் மழைபொழிந்த டேவிட்! 10 ஓவர்களில் 150 ஓட்டங்கள்..வாகைசூடிய பொல்லார்ட் அணி
அபுதாபி டி10 தொடரின் இறுதிப் போட்டியில் அஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணியை வீழ்த்தி யுஏஇ புல்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
டிம் டேவிட் சிக்ஸர் மழை
ஷெய்க் ஸாயெத் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அஸ்பின் ஸ்டாலியன்ஸ் மற்றும் யுஏஇ புல்ஸ் அணிகள் மோதின.
Tim David 𝟗𝟖*(𝟑𝟎) in the Abu Dhabi T10 final. INCREDIBLE power hitting 🔥#AbuDhabiT10 | #CricketTwitter
— Usman (@jamilmusman_) November 30, 2025
pic.twitter.com/4SbTQckXYC
முதலில் ஆடிய யுஏஇ புல்ஸ் அணி 10 ஓவர்களில் 150 ஓட்டங்கள் குவித்தது.
சிக்ஸர்மழை பொழிந்த டிம் டேவிட் (Tim David) ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 98 ஓட்டங்கள் விளாசினார். 
பின்னர் களமிறங்கிய அஸ்பின் ஸ்டாலியன்ஸ் அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 70 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
இதன்மூலம் யுஏஇ புல்ஸ் (UAE Bulls) அணி சாம்பியன் ஆனது. டிம் டேவிட் ஆட்டநாயகன் விருது பெற்றார். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |