வார்னரின் அதிரடி சதம் வீண்: 17.5 ஓவரிலேயே 207 ஓட்டங்கள் எடுத்து வென்ற அணி
சிட்னி தண்டர் அணிக்கு எதிரான பிக் பாஷ் போட்டியில், ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டேவிட் வார்னர் 130 ஓட்டங்கள்
பிக் பாஷ் லீக் 2025/26 தொடரின் 21வது போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய சிட்னி தண்டர் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் டேவிட் வார்னர் (David Warner) 65 பந்துகளில் 130 ஓட்டங்களும், மேடின்சன் 30 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணியில் மிட்செல் ஓவன் மற்றும் டிம் வார்ட் இருவரும் எதிரணி பந்துவீச்சை சுக்குநூறாக நொறுக்கினர்.
வெளுத்து வாங்கிய டிம் வார்ட்
இந்த கூட்டணியின் அதிரடியில் ஹோபர்ட் அணி 51 பந்துகளில் 108 ஓட்டங்கள் குவித்தது. மிட்செல் ஓவன் (Mitchell Owen) 18 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 45 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
❌ Tim Ward
— KFC Big Bash League (@BBL) January 3, 2026
❌ Ben McDermott
Two wickets in the same over from Daniel Sams keeps the Sydney Thunder alive! #BBL15 pic.twitter.com/uCdzMBijhw
அடுத்து வந்த ரெஹான் அகமது 16 (14) ஓட்டங்களில் வெளியேற, டிம் வார்ட் 10 ஓட்டங்களில் சதத்தை தவறவிட்டார். அவர் 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 90 ஓட்டங்கள் குவித்த நிலையில் சாம்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார்.
எனினும் நிகில் சௌத்ரி, மேத்யூ வேட் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆட ஹோபர்ட் அணி 17.5 ஓவர்களில் 207 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகில் சௌத்ரி 14 பந்துகளில் 29 ஓட்டங்களும், மேத் வேட் 13 (5) ஓட்டங்களும் விளாசினர்.
சிட்னி தண்டர் அணியின் தரப்பில் டேனியல் சாம்ஸ் 3 விக்கெட்டுகளும், அகர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |