மலைப்பாறையில் தொங்கும் பெட்டிக்கடை; மலையேறுபவர்களுக்கான ஸ்நாக்ஸ் கடை!
சீனாவில் உள்ள ஒரு பிரமாண்டமான மலையில் மலையேறுபவர்களுக்காக கட்டப்பட்டுள்ள பெட்டிக்கடை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் உள்ள இயற்கை அதிசயங்களோடு, மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டிடங்களும் பிரமிக்க வைக்கின்றன. அவை அங்குள்ள பொறியாளர்களின் திறமையை பிரதிபலிக்கின்றன.
அங்குள்ள ஒரு பெரிய மலையில் தொங்கும் ஸ்நாக்ஸ் ஸ்டோர் (பெட்டிக்கடை) தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
120 மீட்டர் (393 அடி) குன்றின் ஓரத்தில், சிறிய மரப்பெட்டி போல் காட்சியளிக்கும் இந்த கடை அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மலையேறுபவர்களுக்கு இந்த கடை அத்தியாவசியமான தின்பண்டங்கள், குளிர்பானங்கள் மற்றும் சத்துணவு ஆகியவற்றை வழங்குகிறது. Hunan மாகாணத்தின் பிங்ஜியாங் கவுண்டியில் உள்ள Xinyuzhai தேசிய புவியியல் பூங்காவில் உள்ள மலையில் 2018-ல் கடை திறக்கப்பட்டது.
இங்குள்ள தொழிலாளர்கள் ஜிப் லைன்களைப் பயன்படுத்தி கடையைத் திறக்கின்றனர். இந்த கடையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கடை எப்படி வேலை செய்கிறது? அதை நிர்வகிப்பது யார்? என்பதை அறிய நெட்டிசன்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்த கடையில் தொழில்முறை பாறை ஏறுபவர்கள் மட்டுமே வேலை செய்கிறார்கள். அவர்கள் விற்கும் அனைத்து பொருட்களும் ஒரு சிறப்பு கயிறு கன்வேயர் மூலம் கடைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடையில் ஒருவருக்கு மட்டுமே இடம் உள்ளது.
In the Hunan province in China, 120 metres (393 feet) up the side of a cliff
— Science girl (@gunsnrosesgirl3) August 14, 2023
There is a shop
It supplies climbers with essential snacks, refreshments, and sustenance during their ascent. Workers replenish the store using ziplines, to offer a unique shopping experience with this… pic.twitter.com/ZmOnFzMOZO
@gunsnrosesgirl3 என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள், 'இங்கே ஷாப்பிங் செய்ய பயமாக இருக்கிறது'.. 'இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது.. இது நம்பமுடியாதது' என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
china hanging shop, china hanging snacks Store, Snacks shop for rock Climbers