முகத்தில் இருக்கும் பருக்களை போக்க வேண்டுமா? அப்போ இந்த 4 டிப்ஸை யூஸ் பண்ணுங்க
சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க தான் அனைவரும் விரும்புவோம்.
ஆனால் முக அழகை கெடுக்கும் ஓர் விஷயம் பருக்கள். பருக்கள் எரிச்சலூட்டுவதாக இருக்கும்.
முகத்தில் உள்ள பருக்களை அகற்ற சில அருமையான வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன.
Shutterstock
மஞ்சள்
மஞ்சள் சரும ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. அத்துடன் இவை முகத்தில் இருக்கும் பருக்களுக்கு ஒரு அருமையான தீர்வாகவும் செயல்படும்.
இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
அதனால், இது முகப்பருவுடன் தொடர்புடைய சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைகின்றன.
தேயிலை மர எண்ணெய்
தேயிலை மர எண்ணெய் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட எதிர்த்துப் போராடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேயிலை மர எண்ணெயில் ஒரு பருத்தி துணியை நனைத்து படுக்கைக்கு முன் பருக்கள் இருக்கும் கன்னத்தில் தடவ வேண்டும்.
இதுபோல் செய்தல் பருக்கள் விரைவில் மறந்துவிடும்.
தேன்
தேன் ஒரு இயற்கையான ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு.
உங்கள் முகத்தில் இருக்கும் பருக்களில் பச்சை தேனைப் பயன்படுத்துவது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதோடு, உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும்.
பருக்கள் உள்ள இடத்தில தேனை தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
கற்றாழை
கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு மருத்துவ குணம் நிறைந்த தாவரமாகும்.
இது முகத்தில் வரும் பருக்களுடன் தொடர்புடைய சிவத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.
கற்றாழை ஜெல்லை நேரடியாக உங்கள் கன்னத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |