வறண்ட சிக்கலான முடியை மென்மையாக மாற்றுவதற்கு டிப்ஸ்கள்
உங்கள் கூந்தல் வகை எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை வறட்சி தான்.
தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால் கூந்தலானது வறண்டு, உடையக்கூடியதாக மாறுவதால் அதனை சரிசெய்ய இந்த முறையை பின்பற்றுங்கள்.
1. டீப் கண்டிஷனிங்
தலைமுடி வறண்டு காணப்பட்டால், Bottega di Lungavita Balsamo Damaged முடி கண்டிஷனர் தைலம் போன்ற கண்டிஷனிங் தயாரிப்பைப் பயன்படுத்துங்கள்.
இந்த ஆழமான கண்டிஷனிங் ஹேர் மாஸ்க் சேதமடைந்த முடியை மென்மையாக்குவதோடு ஹைட்ரேட் செய்கிறது. பின் கழுவியவுடன் மென்மையாகவும் பட்டுப் போலவும் இருக்கும்.
2. தொடுவதை நிறுத்துங்கள்
அதிகமாக தலைமுடியை தொடுவதன் காரணமாக சில சமயங்களில் உடையக்கூடியதாகவும் சிக்கலானதாகவும் மாறிவிடும்.
3. உலர்த்தவும்
குளித்த பிறகு தலைமுடியை மீண்டும் மீண்டும் தேய்த்து உலர வைக்க முயற்சித்தால் சிக்கலாக தான் மாறும். அதற்கு பதிலாக பழைய பருத்தி துணியை பயன்படுத்தி தலைமுடியை மெதுவாக உலர வைக்கவும்.
4. எண்ணெய் தடவவும்
பெரும்பாலான முடி பிரச்சினைகளுக்கு எண்ணெய் தான் தீர்வாக இருக்கும். ஆயுர்வேத மூலிகைகள் கலந்த கருப்பு எள் எண்ணெயான மதர்ஸ் தெரபி ஹெர்பல் ஹேர் ஆயில் போன்ற பயனுள்ள ஹேர் ஆயிலைக் கொண்டு வாரத்திற்கு ஒரு முறை உங்கள் தலைமுடியை மசாஜ் செய்யுங்கள்.
சூடான எண்ணெய் மசாஜ் உங்கள் தலைமுடியை வேர்களிலிருந்து வளர்த்து மென்மையாக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையு |