திருப்பதியை சுற்றி வரும் ஜட்டி கேங்! கொடூர கொள்ளை கும்பல் குறித்து பீதியில் உறையும் மக்கள்
திருப்பதியில் ஜட்டி கேங் என அழைக்கப்படும் கொடூர கொள்ளை கும்பல் ஒன்று தனது தொடர் கைவரிசையை காட்டி வருகிறது.
ஜட்டி கேங்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஜட்டி கேங் என்ற கொடூரமான கொள்ளை கும்பல் ஒன்று தன்னுடைய கைவரிசையை தொடர்ந்து காட்டி வருவதால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இவர்கள், இரவு நேரத்தில் ஆட்கள் குறைந்த பகுதியில் கொள்ளை அட்டூழியத்தை காட்டி வருவதாக தெரியவந்துள்ளது.
చెడ్డీ గ్యాంగ్ దొంగలున్నారు జాగ్రత్త, తిరుపతి జిల్లా ప్రజలకు పోలీసుల హెచ్చరిక#CheddiGang #Tirupati #APnews#TirupatiPolice pic.twitter.com/4pxIMWOxvu
— ABP Desam (@ABPDesam) November 11, 2023
மேலும், இரவு நேரத்தில் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டாலோ, வினோத சத்தம் கேட்டாலோ அல்லது தண்ணீர் வெளியேறுவது போன்ற சத்தம் கேட்டாலோ பொதுமக்கள் யாரும் உடனடியாக வெளியே சென்று பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் எளிதில் சிக்கி கொள்ளாமல் இருப்பதற்காக ஜட்டி மட்டுமே அணிந்து கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபடுவதாகவும், கையில் கூர்மையான ஆயுதங்கள் வைத்து மிரட்டலில் இறங்குவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், இவர்கள் கொலை கூட செய்ய அஞ்சமாட்டார்கள் எனவும் எச்சரித்துள்ளனர்.
பொலிஸார் எச்சரிக்கை
ஜட்டி கொள்ளை கும்பல் குறைந்த ஆட்கள் இருக்கும் பகுதியில் கைவரிசையை காட்டி வருவதால், அத்தகைய பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
తాడేపల్లిలోని సీఎం క్యాంప్ ఆఫీస్ సమీపంలో వీఐపీల నివాసాల్లో చెడ్డీ గ్యాంగ్ దోపిడీకి ప్రయత్నించింది. ఎమ్మెల్యే కారుమూరి నాగేశ్వరరావు, మాజీ ఎమ్మెల్యే ఆమంచి కృష్ణమోహన్ల విల్లాల్లో దొంగలు చొరబడ్డ దృశ్యాలు సీసీటీవీల్లో రికార్డయ్యాయి. #Vijayawada #Tadepalli #CheddiGang #APPolice pic.twitter.com/nQojn2Y8B2
— BBC News Telugu (@bbcnewstelugu) December 7, 2021
அத்துடன் வெளியூர் செல்லும் போது பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் தெரிவித்து விட்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Cheddi Gang, APPolice, Vijayawada , Tadepalli