பயிற்சியின்போது படுகாயமடைந்ததால் விரக்தி..விபரீத முடிவெடுத்த இளம் கபடி வீரர்
தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விரக்தி
திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சேலத்தில் உள்ள கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு கபடி பயிற்சியின்போது சந்துருவிற்கு மார்பில் படுகாயம் ஏற்பட்டது. அதனை சரி செய்ய சந்துரு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனாலும் காயம் சரியாகவில்லை. இதன் காரணமாக அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரபல நடிகர் சைஃப் அலி கானை வீடுபுகுந்து 6 முறை கத்தியால் குத்திய மர்ம நபர்! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தூக்கில் தொங்கிய வீரர்
இந்த நிலையில் சந்துரு திடீரென தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சந்துருவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |