டைட்டன் நீர்மூழ்கி மரணம்... குற்றவியல் விசாரணையை துவங்கியது கனடா
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீழ்மூழ்கிக் கப்பல் விபத்தில் சிக்கிய விவகாரத்தில் குற்றவியல், பெடரல் அல்லது பிராந்திய சட்டங்கள் மீறப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
ஐவர் மரணமடைந்ததன் காரணம்
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் விபத்தில் ஐவர் மரணமடைந்ததன் காரணம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கவும் கனேடிய பொலிசார் முடிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த விவகாரத்தில் முழு விசாரணை தேவையா இல்லையா என்பதையும் முடிவு செய்ய உள்ளனர்.
AP/Getty Images
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும், சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட அடுத்த நாள் இந்த முடிவை கனேடிய பொலிசார் அறிவித்துள்ளனர். மேலும், மின் தொடர்பான சிக்கல் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்ட நிலையிலும், விசாரணை முன்னெடுப்பதில் கனேடிய பொலிசார் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
அட்லாண்டிக் கடலுக்கு அடியில் 12,500 அடி ஆழத்தில் சிதைந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் நோக்கில் கடந்த வியாழனன்று புறப்பட்ட டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் மிக மோசமான விபத்தில் சிக்கியது.
குற்றவியல் விசாரணைக்கு உத்தரவாதம்
இந்த நிலையில், கனேடிய காவல்துறையில், கண்காணிப்பாளர் கென்ட் ஓஸ்மண்ட் தெரிவிக்கையில், தங்கள் குழுவின் ஒரே நோக்கம் என்பது இந்த விவகாரம் ஒரு குற்றவியல் விசாரணைக்கு உத்தரவாதம் அளிக்கிறதா என்பதை தீர்மானிப்பதாகும் என்றார்.
@getty
மேலும், குற்றவியல், பெடரல் அல்லது பிராந்திய சட்டங்கள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சூழ்நிலைகளை எங்கள் ஆய்வு சுட்டிக்காட்டினால் மட்டுமே அத்தகைய விசாரணை தொடரும் என சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |