டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்பு: சடலங்களும் சிக்கியதாக தகவல்

Accident Death Titanic Submarine
By Arbin Jun 29, 2023 06:56 AM GMT
Report

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் சடலங்களும் காணப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

முறையாக பகுப்பாய்வு செய்யப்படும்

குறித்த சம்பவம் பற்றி அமெரிக்க கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க மருத்துவ நிபுணர்களால் முறையாக பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் அதன் பின்னரே உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்பு: சடலங்களும் சிக்கியதாக தகவல் | Titanic Submarine Recovered Human Remains Image: OceanGate

டைட்டானிக் கப்பலை பார்வையிடுவதற்கான பயணத்தின் போது வெடித்த ஓஷன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் ஐந்து பேர் இருந்தனர். இந்த நிலையில், ஜூன் 28ம் திகதி டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் பல மீட்கப்பட்டது.

இதனையடுத்து கனடாவின் Newfoundland மாகாணத்தின் St John’s கடற்பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டது. கடந்த 1912ம் ஆண்டில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பல் தற்போது கனடாவின் நியூஃபௌண்ட்லாண்ட் தீவுக்கு 740 கி.மீ. தொலைவிலுள்ள கடல்படுகையில் காணப்படுகிறது.

இதனைப் பாா்வையிடும் பொருட்டு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் என்ற அமெரிக்க தனியாா் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட டைட்டன் நீா்மூழ்கிக் கப்பல் கடந்த 18ம் திகதி பயணப்பட்டுள்ளது.

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்பு: சடலங்களும் சிக்கியதாக தகவல் | Titanic Submarine Recovered Human Remains @AP

5,000 பொக்கிஷங்களை மீட்க உதவி

ஆனால் துரதிர்ஷ்டவசமாக புறப்பட்ட 1.45 மணி நேரத்தில் அந்த நீர்மூழ்கிக் கப்பல் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில், டைட்டானிக் கப்பலைப் பாா்வையிடுவதற்காக நீா்மூழ்கியில் சென்ற பாகிஸ்தான் தொழிலதிபா் ஷேஸாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகியோரும்,

ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனா் ஸ்டாக்டன் ரஷ், பிரித்தானிய தொழிலதிபா் ஹமீஷ் ஹாா்டிங், பிரான்ஸ் கடற்படை முன்னாள் கமாண்டோ பால்-ஹென்றி நாா்கியோலே ஆகியோரும் மரணமடைந்தனர்.

தற்போது டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதில் சடலங்களும் காணப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

இது குறித்து கடலோரப் படையின் ஜான் மாகர் பேசுகையில், டைட்டானிக் கப்பலுக்கு அருகில் ஒரு பெரிய குப்பைக் களத்தில் நீர்மூழ்கியின் 5 பெரிய துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதில், டைட்டானியம் எண்ட் கேப், டைட்டானியம் வளையம், தரையிறங்கும் சட்டகம், கருவிகள் வைக்கும் பெட்டி ஆகியவை கிடைத்துள்ளன.

இந்த மீட்புப் பணிக்கு கனடா கப்பலான ஹொரைசன் ஆர்க்டிக் தலைமையேற்று பணியாற்றியது. தற்போது, அந்த கப்பல் தன்னுடைய மீட்புப் பணிகளை முடித்துக் கொண்டு திரும்ப உள்ளது என்றார்.   

டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் உடைந்த பாகங்கள் மீட்பு: சடலங்களும் சிக்கியதாக தகவல் | Titanic Submarine Recovered Human Remains @OceanGat

மரணமடைந்தவர்களில் பால்-ஹென்றி நாா்கியோலே, டைட்டானிக் நிறுவனம் சார்பில் செயல்பட்டு, மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலில் இருந்து சுமார் 5,000 பொக்கிஷங்களை மீட்க உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US