ரூ.3 கோடிக்கு ஏலம் போன டைட்டானிக் பயணியின் தீர்க்கதரிசன கடிதம் - அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?
டைட்டானிக் கப்பலில் பயணித்த பயணியின் கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுளளது.
டைட்டானிக் கப்பல்
1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்கு புறப்பட்டது டைட்டானிக் கப்பல்.
அன்றைய காலத்தில், மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலாக கருதப்பட்ட டைட்டானிக் கப்பல், தனது முதல் பயணத்திலேயே அட்லாண்டிக் பனிப்பாறையில் மோதி கடலில் மூழ்கியது.
2200 பேர் சென்ற இந்த பயணத்தில், ஏறத்தாழ 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படம், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.
ரூ.3 கோடிக்கு ஏலம்
சென்ற கடிதம் இந்த கப்பல் தொடர்பாக கிடைக்கப்படும் பல்வேறு பொருட்கள், அவ்வப்போது பெரும் தொகைக்கு ஏலத்தில் விடப்படுகிறது.
அதே போல், தற்போது அதில் பயணித்த கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி(Archibald Gracie) என்ற பயணி எழுதிய கடிதம், நேற்று இங்கிலாந்தில் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.
£60,000க்கு இந்த கடிதம் ஏலத்தில் வாங்கப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் அந்த கடித்தை £300,000 (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி)க்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.
முதல் வகுப்பு பயணியான ஆர்ச்சிபால்ட் கிரேசி, பயணம் புறப்பட 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதியன்று, C51 கேபினிலிருந்து இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
ஏப்ரல் 11 ஆம் திகதி, அயர்லாந்தின் குயின்ஸ்டவுனில் கப்பல் நின்ற போது, இந்த கடிதம் அஞ்சல் செய்யப்பட்டுள்ளது.
கடிதத்தில் இருந்தது என்ன?
பயணம் நிறைவு செய்த பிறகே சிறந்த கப்பல் என தீர்ப்பு வழங்க முடியும் என அவர் இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த கடிதம், 'தீர்க்கதரிசன கடிதம்' என கருதப்படுகிறது.
இதுவரை டைட்டானிக் கப்பலில் எழுதப்பட்ட கடிதங்களில், இந்த கடிதமே அதிக தொகைக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
இந்த விபத்தில் உயிர் பிழைத்த அவர், பனிக்கட்டி நீரில் கவிழ்ந்த படகில் ஏறி தான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பதை விவரித்து, 'The Truth About The Titanic' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அந்த படகை அடைந்தவர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் சோர்வு அல்லது குளிரால் இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் அப்போதைய சூழலில் உயிர் தப்பியிருந்தாலும், தாங்க முடியாத குளிர் மற்றும் உடல் காயங்களால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், 1912 டிசம்பர் 2 ஆம் திகதி கோமாவுக்குச் சென்று, அடுத்த இரு நாட்களில் உயிரிழந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |