பிரித்தானிய கோடீஸ்வரருடன் மாயமான டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல்: நிபுணர்கள் கூறும் காரணங்கள்
விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற பிரித்தானிய கோடீஸ்வரருடன் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் மாயமான நிலையில், அதன் காரணம் குறித்து நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல் தொடர்பில் முன்னணி நிபுணர் ஒருவர், தற்போது மாயமான டைட்டானிக் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பல் குறித்து சாத்தியமான காரணங்களை பட்டியலிட்டுள்ளார்.
Image: OceanGate Expeditions
ஜூன் 19 நிலவரப்படி, நீர்மூழ்கிக் கப்பலுடன் மாயமான ஐந்து பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பாஸ்டன் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் பிரித்தானிய கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் என்பவரும் பயணப்பட்டிருந்தார். ஞாயிறன்று விடிகாலை 4 மணியளவில் குறித்த கப்பலானது பயணம் மேற்கொண்டுள்ளது.
இதில் அந்த தொடர்புடைய நிறுவனத்தின் நிறுவனரும் பயணப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்புடைய கப்பல் புறப்பட்ட 45 நிமிடங்களுக்கு பின்னர் தொடர்புகளில் இருந்து மாயமானதாக கூறுகின்றனர்.
96 மணி நேரம் மட்டுமே
கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங் மட்டுமின்றி, அவரது வளர்ப்பு மகனும் அவருடன் இந்த பயணத்தில் உடனிருந்தார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அந்த கப்பலானது 96 மணி நேரம் மட்டுமே கடலுக்குள் பயணிக்கும் திறன் கொண்டது என கூறுகின்றனர்.
இந்த நிலையில், கடலுக்குள் 11 மீற்றர் அல்லது 11 கி.மீற்றரில் எந்த மோசமான சூழல் ஏற்பட்டாலும், அது ஆபத்து தான் என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் ஆழமான நீரில் இருக்கும்போது, ஏதோ நடக்கிறது என்பதை உணரும் முன்பே மரணம் நிகழ்ந்துவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Image: OceanGate Expeditions
மேலும், தெற்கு நியூஃபவுண்ட்லாந்தின் தென்கிழக்கே 370 மைல்கள் தொலைவில் தற்போது அந்த நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகியுள்ளது. அவர்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்திருக்கலாம் அல்லது ஏதேனும் எதிர்பாராத கோளாறு கப்பலில் ஏற்பட்டிருக்கலாம் என்றே கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |