டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற குழு: நீர்மூழ்கி கப்பலுடன் பிரித்தானிய பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் மாயம்
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர் மூழ்கி கப்பல் காணாமல் போனதை தொடர்ந்து அதில் இருந்த பிரித்தானியாவின் முன்னணி பணக்காரர் ஹமிஷ் ஹார்டிங் அவர்களும் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன நீர்மூழ்கி
கடந்த 1912ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி மிகப் பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் 2200 பயணிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது.
ஆனால் துரதிஷ்டவசமாக டைட்டானிக் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் உள்ள பனி மலையில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த 1600 நீர் மூழ்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில் சிதைந்த டைட்டானிக் கப்பலை பார்வையிட 5 பேர் கொண்ட குழு ஒன்று நீர்மூழ்கி கப்பலின் உதவியுடன் கடலுக்குள் சென்று காணாமல் போய் உள்ளது.
Sky News
காணாமல் போன் பிரித்தானிய தொழிலதிபர்
இதற்கிடையில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பலில் பிரித்தானியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான ஹமிஷ் ஹார்டிங்(Hamish Harding) இடம்பெற்று இருந்ததாக தெரியவந்துள்ளது.
மொத்தமாக 5 பேர் வரை இந்த பயணத்தை பதிவு செய்து இருந்த நிலையில், அதில் ஒருவராக ஹமிஷ் ஹார்டிங் இருந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை பயணத்தை தொடங்கிய கப்பல் 45 நிமிடங்களுக்கு பிறகு பிரின்ஸ் என்ற ஆராய்ச்சிக் கப்பல் உடனான தொடர்பை நீர்மூழ்கி கப்பல் இழந்ததாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.
Sky News
மேலும் ஹமிஷ் ஹார்டிங் உடன் டைட்டன் என்ற பிரெஞ்சு நீர்மூழ்கி கப்பல் பைலட் பால்-ஹென்றி நர்கோலெட் மற்றும் ஓபன் கேட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டாக்டான் ரஷ் (Stockton Rush) ஆகியோர் காணாமல் போகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
ஹமிஷ் ஹார்டிங்கின் வளர்ப்பு மகன் பிரையன் சாஸ் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தகவலில், தந்தை ஹமிஷ் ஹார்டிங் மீது எண்ணங்களும் பிராத்தனைகளும் உள்ளது, அத்துடன் அவரை கண்டுபிடிக்கும் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.
Sky News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |